காதல் வலி

மரணத்தின் வலியை விட கொடியது
கண்மணியே காதலின் வலி...

மரணம் என்பது வாழ்வில் ஒருமுறை தான்
ஆனால் காதல் தோல்வியால்
மரணம் நொடிக்கு நொடி நிகழும் என் அன்பே...

மனது எங்கே என்று இதுவரை நான் கண்டதில்லை
நீ என்னை விட்டு பிரியும் போது கண்டேனடி
எனது மனது ஏங்கி ஏங்கி கண்ணீர்விட்டதை...

நம்பவும் முடியவில்லை
நம்பாமலும் இருக்கவும் முடியவில்லை

நீ என்னை விட்டு பிரிந்து சென்றாய் என்பதை...

என் கண்கள் அழவில்லை
என் இருதயம் அழுகிறது...

என் மூளை நம்பவில்லை
என் மனது நம்புகிறது..

என்னை விட்டு சென்றாயடி...
என் உயிரே...

Comments