என்றும் உன் நினைவில்




அவன் நிறம்
திரும்பி பார்க்கும் நிறம் அல்ல ...
ஆனாலும் நான்
திரும்ப திரும்ப பார்க்க ஏங்குகிறேன் .....

அவன் குரல் இனிமை அல்ல ....
ஆனாலும் நான்
கேட்டு கொண்டே இருக்க நினைக்கிறேன் ....

அவள் பேச்சு புரியவில்லை
ஆனாலும் நான்
அதை ரசிக்க மறப்பதில்லை ....
அவன் தினம் சண்டை போடும்
இம்சை அரசன்தான் ...
ஆனால் அந்த அன்பான ராட்சன்
வேண்டாம் என்று நான்
ஒரு நாளும் நினைக்கவில்லை ....

அவன் தொடர்ந்து அழைத்து கொண்டிருக்கும்
அலை பேசி அழைப்புகள்
எனக்கு தொந்தரவுதான் ...
ஆனாலும் அவற்றிற்கு
பதில் சொல்ல நான் மறந்ததில்லை ...
திரும்ப திரும்ப வரும்
அவனது " மறந்துட்டியா " " என்னை மறந்திரு "
என்ற குறுஞ்செய்திகள் எனக்கு வலிகள் தான்
ஆனாலும் நான் அவனை
வெறுத்தது இல்லை ..

ஏனெனில் ...
அவன் என்னவன்..
அவன் உலகில் நான் ஒருத்தி மட்டுமே ..
அவனுக்கு எப்போதும் என் நினைவுதான் ....
அவன் சந்தோசம் துக்கம் அழுகை கோபம்
இவற்றை என்னிடம் தானே காட்டுவான் ...
வேறு யாரிடம் இவற்றை காட்ட முடியும் ???
என் உயிரானவன்
இன்று மௌனமாய் எனது கவிதையை
மட்டும் வலியுடன் ரசிக்கும்


Comments