வாழ்க்கை என்பது நரகமே

உள்ளொன்று வைத்து
புறம் ஒன்று பேசும்
உன் சொல்லை
உணர்கிறேன் காதலி

என் கண்களில் வழியும்
கண்ணீர்
நீ தான் என்று
உணர்கிறேன் காதலி

விடிந்தும் விடியா இரவோடு
உன் நினைவு
எனை சுற்றி வருவதை
உணர்கிறேன் காதலி

உனக்காய் நான் எங்கும்
ஒவ்வொரு நொடியும்
எவ்வளவு நரகவேதனை என்பதை
உணர்கிறேன் காதலி

நீ சிரிக்கும் போதெல்லாம்
உன் சிரிப்பில்
நான் சிதைவதை
உணர்கிறேன் காதலி

தனிமையில்  உன் நினைவு
எனக்கு
எவ்வளவு சுமையென்று
உணர்கிறேன் காதலி

என் சுவாசமே
நீ தான் என்று
உணர்கிறேன் காதலி

நீ இல்லாத உலகம்
எனக்கு
நரகம் என்பதை
உணர்கிறேன் காதலி

இவை அனைத்தும்
நான் பெற்ற வலி..

என்று உணர்வாய் காதலி

உனக்காய் நான்
உயிர் வாழ்கிறேன் என்று.. இனிமேல் இல்லையோ காதலி

ஒரு ஆணின்
காதல் வலி..

இனிமே இந்த காதல் உனக்கில்லை என்பதை உணர்ந்துகொள் காதலி,,





Comments