கண்ணம்மா என் காதலி

சோர்வான கணங்களையும் 
உயிர்ப்போடு நிரவி 
நதியாக என்னுள் புகுந்து 
மெய்ப்பொருள் உணர்ந்து 
வீணையை மீட்டி 
காலத்தை நகர்த்தியவள் நீயடி....

வாழ முடியாத கடந்த கால 
வலிகளை பேசாமடந்தையாகி
கண்களில் கவிபாடி 
மனதோடு மனம் பேச 
மொழி மௌனமாக 
வலியையும் இனிமையாய் 
சுவைக்கும் வினோத கலையை 
சொன்னவள் நீயடி....

உடைந்த கண்ணாடி 
துண்டுகள் போல் சமூகம்!!! 
மனதின் சுவர்களை 
கீறி காயப்படுத்த 
நீரோடும் உணவோடும் உள்வாங்கி 
பிராணவாயுவை சுவாசம் கொண்டு 
நிகழ்கால நிகழ்வுகளோடு 
வாழ்வியலை வாழ 
கற்பித்தவள் நீயடி.....

வாழ்க்கை எனக்களித்த
எதிர் பாராத காதல் பரிசு நீயடி
என்னுயிரோ கண்ணம்மா...
நீ எனது இன்னுயிர் கண்ணம்மா....

Comments