உன் நினைவுகளால் தவிக்கிறேன்

ஓராயம்  ஆசைகள் உதிர்ந்து கொள்கிறது நீ தந்திட்ட ஒற்றை  பார்வையில்...
அவை தந்த இன்ப நினைவுகளால் உறக்கமின்றி தவிக்கிறேன்..

வேண்டாம் வேண்டாமென உனது உதடுகள் உதிர்த்திட
வேண்டும் வேண்டுமென உன் உள்ளம் ஏன் தவித்தது..

நின் உள்ளத்தின் ஓசையை
உன் கண்கள் உதிர்ந்து,
ஏன் என் இதயக்குருதியின் கரம்
கவ்வி சென்றது?

நீதான் என்னை தொடர்ந்தாய்,
இப்போது ஏன் என்னை  தேடலில் தவிக்கவிடுகிறாய்?

சுகங்கள் தவழ்ந்த கண்களில்,
சோகங்களை ஊற்றி கண்ணீரில் ஏன் மூழ்கடித்தாய்?

நீ எனக்காக தந்த பார்வைக்கு இணையான அமிர்தமும் இல்லை,
உன் மௌனத்திற்க்கு நிகரான போர் ஆயுதம்
 இவ்வுலகில் இருக்கபோவதுமில்லை..

புன்னகையும் உன்னாலே
 சிந்தும்
கண்ணீரும் உன்னாலே!
வாழ்ந்ததும் உன்னாலே.
இனியும்  பிரிவென்றால்
 நான் இறப்பதும்  உன்னாலே!..

Comments